LEARNING STARTS HERE
சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறக்கூடிய “ஆரம்ப ஜோதிடம்” எனும் இந்தப் பாடத்திட்டம் பெயருக்கேற்ப ஜோதிட சாஸ்த்திரத்தில் நுழைவதற்கான தகுதியை ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் ராசிகளின் தன்மைகள், நவாம்சம் முதலிய வர்கங்கள், கிரஹங்களின் தன்மைகள், ராசிபலம், கிரஹபலம், கிரஹங்களின் சத்ரு-மித்ர-சம நிலைகள் மற்றும் கிரஹங்களின் சுபாவங்களை அறியலாம். மேலும் உபநயனம், விவாஹம் போன்ற முக்யமான முஹூர்த்த விதிகள் போன்ற பல விஷயங்கள் கற்ப்பிக்கப்படும்.
பாட நூல்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தாலும், அவை தமிழில் கற்ப்பிக்கப்படுவதால் ஸம்ஸ்க்ருதப் பிண்ணனி இல்லாதவர்களும் இதில் சேரலாம்.
The course:
"Aaramba Jothidam" is a course which gives you an insight into basic Jyotisha Shastram (Astrology).
The classes:
Classes will happen in the college premises. If you are not a resident of chennai or not able to attend the classes, no worries. You can learn with the video recordings of the classes uploaded on the next day.
Objective:
The objective of this course is to make one eligible to understand Rashis, their Navamshams, Vargas, strength of Rashis, Navagrahas, Shatru Mitra Sama Bhavas of Navagrahas etc. One will also be able to calculate auspicious time for some rituals like Upanayanam, wedding etc at the end of this course.
Though the texts are in Sansrit, the course is taught in Tamil medium. So those who have no basic knowledge in Sanskrit can also join this course.
- ப்ருஹஜ்ஜாதகம் → இரண்டு அத்யாயங்கள்
- முஹூர்த்தபதவீ → 1 to 6, 9,13, 17 & 28 ஶ்லோகங்கள்
- ஸூர்யஸித்தாந்தம் → 1 to 25 ஶ்லோகங்கள்
- Prasannamargam (Part 1)
- And a few other aspects of Jyothisha Shastra apart from these book
- Bruhadjadagam (2 chapters)
- Muhurthapadavi (1 to 6, 9, 13, 17 & 28 slokhas)
- Surya-siddhantham (1 to 25 slokhas)
- ப்ரஸ்னமார்கம் → பகுதி 1
மேலும்,
- புத்தகங்கள் சாராத இதர முக்கிய விஷயங்கள் மற்றும் அம்ஶங்கள்
1. கேள்வி: ஆரம்ப ஜோதிடம் இணையவழிக் கல்வியா?
பதில்: ஆரம்ப ஜோதிடம் கல்லூரி வளாகத்தில் நடத்தப்படும் பாடத்திட்டமாகும்.
2. கேள்வி: ஆரம்ப ஜோதிடம் பாடங்களை மேற்கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
பதில்: ஆரம்ப ஜோதிடம் மேற்கொள்வதற்குத் தமிழ் மொழியும், கணினி பயன்படுத்துதலும் தெரிந்திருந்தாலே பொதும். மற்றெந்த தகுதியும் வேண்டாம்.
3. கேள்வி: இந்த பாடத்தில் வயது வரம்பு உள்ளதா?
பதில் : 15 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம்.
4. கேள்வி: கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாடத்திற்கு இணையதளம் மூலம் ஏன் பதிவு செய்ய வேண்டும்?
பதில் : இடையே ஒருசில வகுப்புகளில் பங்கு கொள்ள முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். நடத்தப்படும் பாடங்களின் ஒளிப்பதிவுகளை நாங்கள் இந்த இணையதளத்திலேயே பதிவேற்றம் (upload) செய்யுவோம். அந்த ஒளிப்பதிவுகளைக்கொண்டு விட்டுப்போன வகுப்புகளின் விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். ஒறுகால் தொடற்சியாக மூன்று பாடங்களுக்கு மேல் நேரிடையாக பங்குகொள்ள இயலவில்லை என்றால் தாங்கள் பாடத்திட்டத்திலிருந்து முன்னறிவிப்பில்லாமல் நீக்கப்படுவீர்கள்.
5. கேள்வி: நமது ஸம்ஸ்க்ருதம் பாடத்திட்டத்திற்குத் தேவையான புத்தகங்கள் யாவை? அவைகளை எவ்வாறு பெறவேண்டும்?
பதில் : பாடங்கள் கல்லூரியில் நடைபெற்றாலும் நடைபெறும் பாடங்களிண் ஒளிப்பதிவுகள், அந்தந்தப் பாடங்களுக்கான வினா-விடைகள் மற்றும் பாடசம்பந்தமான பயிற்சி ஏடுகள் முதலியவை இணையதளம் மூலம் அளிக்கப்படுவதால் இப்பாடத்திட்டத்திற்கு இணையவழி பதிவு இன்றியமையாததாகும்.
அல்லது இவ்விரண்டு புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்ய இந்த வளைதளத்தின் முகப்பிலுள்ள LIVE BOOKS என்ற Menu-வைப் பயன்படுத்தலாம்.
6. கேள்வி: இதன் மூலம் ஜாதகம் பார்க்க அறிய முடியுமா?
பதில் : இல்லை, இதன்மூலம் ஜாதகத்திற்குத் தேவையான முக்கியமான அடிப்படை விஷயங்களை அறிய முடியும்.
7. கேள்வி: பாடம் எந்த மொழியில் நடத்தபடும்?
பதில் : தமிழில் நடத்தபடும்.
8. கேள்வி: ஆரம்ப ஜோதிடம் பாடத்திட்டத்தில் சேருபவர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்படுமா?
பதில் : கிடையாது புடகங்களை மாணவர்களே வாங்கிக்கொள்ள வேண்டும். சில புத்தகங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
9. கேள்வி: ஆரம்ப ஜோதிடம் பயின்ற பின்பு சான்றிதழ் அளிக்கப்படுமா?
பதில் : ஆம். இறுதியில் தேர்வு உண்டு. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் அளிக்கப்படும்.
9. கேள்வி: இணையவழிக்கல்வியை எவ்வாறு சுலபமாக்கலாம்?
பதில் : Google Chrome அல்லது Micrsoft Edge போன்ற browser-களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். Browser-இல் 'Settings' உள்புகுந்து, 'Clear browsing data' என்று தேடி, அனைத்தையும் delete செய்யவேண்டும். அங்கனம் செய்தால் browser சுத்தமாக விளங்கும். பயிலும்போது தொழில்நுட்பச்சிக்கல்கள் வரமாட்டா.