In Campus Courses
Tantra Prakashika
Course Duration
Course Fee
Students Enrolled
பாடத்திட்ட விவரங்கள்
சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் மூலம் நடைபெறக்கூடிய தந்திர பிரகாசிகை பகுதிநேர வகுப்பு எனும் இந்த பாடத்திட்டம் பெயருக்கு ஏற்ப தந்திர (ஆகமங்கள்) சாஸ்திரத்தில் உள்ள நித்திய கர்ம விதி போன்றவற்றின் ஞானத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சேர கல்லூரியை அணுகவும்.
ஆசிரியர்
“ஆகம ப்ரவீணர்”, “வ்யாகரண சிரோமணி” சிவஸ்ரீ விஜய.சோமசேகரசிவாச்சாரியார் M.A அவர்கள்.
பாடமுறை
நடந்து முடிந்த பாடங்கள் காணொளி (video record) மூலம் பதிவாகியுள்ளது. இப்பதிவை ஆகம பாடசாலை மாணவர்கள் பார்த்து பயன்பெறலாம்
குறிக்கோள்
இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் அகோர சிவாச்சாரியார் பத்ததியில் கூறப்பட்டுள்ள ஸ்நான, சந்தியாவந்தன, நித்திய பூஜை, நித்திய விதி, பவித்திர விதி, தமனவிதி, தீக்ஷை மற்றும் நித்யாக்னிகார்யம், பஞ்ச சுத்தி, போன்ற கிரியைகளை அறியலாம். பாட நூல்கள் க்ரந்த லிபியில் இருப்பதால் ஓரளவு க்ரந்த லிபி வாசிக்கத்தெரிந்திருப்பது நன்று.
பாடத்திட்டம்
ஸ்ரீ நிர்மலமணி தேசிகர் இயற்றிய ப்ரபா வியாக்கியானத்துடன் க்ரியா க்ரமத்யோதிகா எனும் ஸ்ரீமத்-அகோர சிவாச்சார்ய பத்ததி எனும் நூலில் உள்ள
நித்ய விதி
பவித்திர விதி
தமன விதி
சமய தீக்ஷா விதி
தந்த்ரப்ரகாசிகா பாடத்திட்டங்களை மேற்கொள்வதற்கு என்ன தகுதிகள் வேண்டும்?
தந்த்ரப்ரகாசிகா பாடத்திட்டங்களை மேற்கொள்வதற்கு சமய-விசேஷ தீக்ஷை ஆகியிருக்கவேண்டும்,மற்றும் தமிழ் மொழியும்,சம்ஸ்க்ருத மொழியும் தெரிந்திருந்தாலே போதும்,பாடநூல்கள் க்ரந்த லிபியில் இருப்பதால் ஓரளவு க்ரந்தம் வாசிக்கத்தெரிந்திருப்பது நன்று.
பாடம் எந்த மொழியில் நடத்தப்படும்?
தமிழில் நடத்தப்படும்.
தந்த்ரப்ரகாசிகை பாட திட்டத்தில் சேர்பவர்களுக்கு புத்தகங்கள் அளிக்கப்படுமா?
கிடையாது, புத்தகங்களை மாணவர்களே வாங்கிக்கொள்ள வேண்டும்